இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் - மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத் பேச்சு + "||" + I feel proud to be a Hindustani Muslim: Congress MP Ghulam Nabi Azad in his retirement speech in RS
இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் - மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத் பேச்சு
இந்திய முஸ்லிமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத் கூறினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இதையொட்டி அவர்களுக்கு பிரியாவிடை நடைபெற்றது.
பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபிஆசாத் மாநிலங்களைவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி நான் கேள்விப்பட்ட போது ஒரு இந்திய முஸ்லீமாக எனக்கு பெருமை கொள்கிறேன்.
மாநிலங்களவை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த மாநிலங்களவை எம்.பி.க்களில் நானும் விடைபெறுகிறேன். நஜீர் அகமது லாவே மற்றும் முகமது ஃபயாஸ் ஆகியோருடனான எனது பல தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன்.
தீவிரவாதமும், பயங்கரவாதமும் என்றும் நாட்டில் இருந்து ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும்? என கண்ணீர் மல்க குலாம் நபிஆசாத் பேசினார்.