இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புகிறது - பிரதமர் மோடி


இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புகிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 9 Feb 2021 10:17 AM GMT (Updated: 9 Feb 2021 10:17 AM GMT)

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும், பயங்கரவாதம் இல்லாத சூழலையே விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உடனான உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ இந்தியாவும், ஆப்கானிஸ்தானும், தங்கள் நாட்டுப் பகுதிகள் பயங்கரவாதத்திலிருந்து விடுபட விரும்புகின்றன” என்று கூறினார். மேலும் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்ததோடு, நாட்டில் ஒரு விரிவான போர்நிறுத்தத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும் கூறினார்.

இதுதொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, “ஷாஹூத் நீர்த்தேக்கம் மூலம், பாபரின் கற்பனையை கவர்ந்த இயற்கை அழகை மீட்டெடுக்கும் எங்கள் பார்வையை செயல்படுத்த முடியும். தடுப்பூசிகளின் பரிசுக்கு கூடுதலாக, இந்த நீர் பரிசை வழங்கிய இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்தார். 

முன்னதாக பயங்கரவாதம் இல்லாத நாடுகளை உருவாக்குவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் காபூலில் ஷாஹூத் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Next Story