நாடு முழுவதும் 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு


நாடு முழுவதும் 65 லட்சம் பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
x
தினத்தந்தி 9 Feb 2021 5:50 PM GMT (Updated: 9 Feb 2021 5:50 PM GMT)

நாடு முழுவதும் 65.28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று  (செவ்வாய்கிழமை)  2,69,202 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 1,02,941 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 1,66,261 பேர் முன்களப் பணியாளர்கள். இதுவரை மொத்தம் 65,28,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இதில் 55,85,043 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 9,43,167 பேர் முன்களப் பணியாளர்கள் ஆவர். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story