கர்நாடகாவில் மேலும் 366- பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 366- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Feb 2021 6:25 PM GMT (Updated: 9 Feb 2021 6:25 PM GMT)

கர்நாடகாவில் மேலும் 366- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில்  கடந்த 24 மணி நேரத்தில்  366- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 513- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 212- ஆக உள்ளது. அதேபோல், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 25 ஆயிரத்து 167- ஆக உள்ளது. வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,241- ஆக உள்ளது. தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5,785- ஆக உள்ளது.

Next Story