1,178 கணக்குகளை நீக்க உத்தரவு எதிரொலி; மத்திய அரசுடன் பேச்சு நடத்த ‘டுவிட்டர்’ நிறுவனம் விருப்பம்


1,178 கணக்குகளை நீக்க உத்தரவு எதிரொலி; மத்திய அரசுடன் பேச்சு நடத்த ‘டுவிட்டர்’ நிறுவனம் விருப்பம்
x
தினத்தந்தி 9 Feb 2021 6:31 PM GMT (Updated: 9 Feb 2021 6:31 PM GMT)

1.178 கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த ‘டுவிட்டர்’ நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

7 ஆண்டு ஜெயில்
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பொய்ச்செய்திகளையும், ஆத்திரமூட்டும் பதிவுகளையும் வெளியிட்டு வரும் ‘டுவிட்டர்’ கணக்குகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் பாகிஸ்தான் ஆதரவாளர்களும், காலிஸ்தான் ஆதரவாளர்களும் இயக்கி வரும் 1,178 கணக்குகளை நீக்குமாறு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு கடந்த 4-ந் தேதி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது.

இதை பின்பற்றாவிட்டால், அபராதமும், 7 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும் விதிக்க சட் டத்தில் இடம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இந்த உத்தரவை ‘டுவிட்டர்’ இன்னும் செயல்படுத்தவில்லை.

பேச்சுவார்த்தை
இந்தநிலையில், ‘டுவிட்டர்’ செய்தித்தொடர்பாளர் நேற்று கூறியதாவது:-

நாங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அதற்காக தகவல் தொழில்நுட்ப மந்திரியை அணுகி இருக்கிறோம். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய ‘ஹேஷ்டேக்’குகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியதையும் ‘டுவிட்டர்’ முழுமையாக செயல்படுத்தவில்லை.

Next Story