மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் - மம்தா பானர்ஜி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 Feb 2021 11:11 AM GMT (Updated: 10 Feb 2021 11:11 AM GMT)

மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் தங்களுக்கு பாடம் எடுப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணாமூல் காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் தங்களுக்கு பாடம் எடுப்பதாக மாநில முதல்மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மால்டாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால் கலவரம் தான் நடக்கும். கலவரம் நடக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஆனால் நீங்கள் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முடியாது. ஏனெனில் மம்தா பானர்ஜி தனியொரு பெண் அல்ல.

மம்தா தனியாக இல்லாததால் அவரை தோற்கடிக்க முடியாது, அவருக்கு மக்களின் ஆதரவு உள்ளது. என் பின்னால் மக்கள் திரண்டுள்ளனர். மேற்குவங்கத்தில் நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன். இது உறுதி. மேற்கு வங்கத்தின் வரலாறு, கலாச்சாரம் தெரியாதவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.  

Next Story