தேசிய செய்திகள்

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி - மத்திய வெளியுறவுத்துறை அனுமதி + "||" + Export of Indian Corona Vaccines to 25 Countries - External Affairs Permission

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி - மத்திய வெளியுறவுத்துறை அனுமதி

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி - மத்திய வெளியுறவுத்துறை அனுமதி
25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1.05 கோடி கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த மாதம் 25 நாடுகளுக்கு 2.40 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய, வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. புனேவைச் சேர்ந்த, சீரம் மையத்தின் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட, 25 நாடுகளுக்கு, 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும். ஏற்கனவே, 20 நாடுகளுக்கு, 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட, 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, 63 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும். இந்த நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.