உத்தரகாண்ட் திடீர் வெள்ளம் 4 வது நாள் மீட்பு பணி: ஆற்றில் உயரும் நீர்மட்டத்தால் பணிகள் பாதிப்பு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 11 Feb 2021 12:47 PM GMT (Updated: 11 Feb 2021 12:47 PM GMT)

உத்தரகாண்ட் பனிப்பாறை வெடிப்பு 4 வது நாள் மீட்பு பணி ஆற்றில் உயரும் நீர்மட்டத்தால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது; நீர்மட்டம் குறைந்ததும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுடெல்லி

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன. 

தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. 

இந்த பேரழிவில் 35 பேர் உயிரிழந்தனர் மற்றும் 170 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஜோஷிமத் பகுதியில் நீர்மின் உற்பத்தி நிலையம் அருகே உள்ள அந்த சுரங்கத்திற்குள் 35 பேர் வரை சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவர்களை மீட்பதற்கான பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திடீரென ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், பாதுகாப்பு கருதி மீட்பு பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் குறைவான மீட்புக்குழுவுடன் மீட்பு பணி மீண்டும் துவங்கி நடைபெறுகிறது. சுரங்கத்திற்குள் இருக்கும் சேறு, சகதியை அகற்றி வருகின்றனர்.

தவுலி கங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்தது, இதனால் தபோவனில் உள்ள சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சுரங்கப்பாதையின் உள்ளே பணிபுரிந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பனியில் ஈடுபட்டிருந்த கனரக இயந்திரங்கள் திரும்பப் பெறப்பட்டன.

தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கம், 1,500 மீட்டர் நீளம் கொண்டது. சுரங்கத்தில் சேர்ந்துள்ள சேறு, இடிபாடுகளை கனரக எந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 120 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டனர். இன்னும் 100 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்றி விட்டால், தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை வரை, சுரங்கப்பாதையின் வாயிலிருந்து சுமார் 120 மீட்டர் சேறு அகற்றப்பட்டு உள்ளது. உள்ளே சிக்கியவர்கள் 180 மீட்டரில் எங்காவது இருக்கலாம்  என கூறப்பட்டது.

சுரங்கப்பாதையின் உள்ளே இருந்து அதிக சேறும் நீரும் வருவது  மீட்பு பணிகளை  கடினமாக்குகிறது 

ஐ.டி.பி.பி தலைவர் எஸ்.எஸ். தேஸ்வால்  தனது ஆட்களும் பிற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் "எந்த நேரமும்" வரை அல்லது  சிக்கியுள்ள தொழிலாளர்கள் இருக்கும் வரை மீட்புப் பணியைத் தொடருவார்கள் என்று தெரிவித்தார்.

கட்டமைப்பில் சாத்தியமான காற்று துவாரங்களின் உதவியுடன் உள்ளே சிக்கியவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

உள்ளே சிக்கியவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மோசமான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை என்று ஒரு அதிகாரி கூறினார்.

"ஆனால் சுரங்கப்பாதையின் உள்ளே வெப்பநிலை சுமார் 20-25 டிகிரி செல்சியஸ் மற்றும் சில  இடங்களில் ஆக்ஸிஜன் அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என்பதால் அவை எப்படியாவது உயிர் பிழைத்திருப்பார்கள்  நம்பிக்கை உள்ளது" என்று அந்த அதிகாரி கூறினார்.

Next Story