தேசிய செய்திகள்

வேறொரு வாலிபருடன் காதலி ஓடியதால் விவசாயி தற்கொலை + "||" + Farmer commits suicide by hanging

வேறொரு வாலிபருடன் காதலி ஓடியதால் விவசாயி தற்கொலை

வேறொரு வாலிபருடன் காதலி ஓடியதால் விவசாயி தற்கொலை
ஹாவேரி அருகே வேறொரு வாலிபருடன் காதலி ஓடியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஹாவேரி:

ஹாவேரி அருகே வேெறாரு வாலிபருடன் காதலி ஓடியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது. 

வாலிபருடன் காதலி ஓட்டம்

ஹாவேரி மாவட்டம் இரேகெரூர் தாலுகா பூதிகாலா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜப்பா உப்பார் (வயது 22). இவர் விவசாயி ஆவார். இவரும் பூதிகாலா கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கும், இன்னொரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த இளம்பெண்ணும், வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணும், அந்த வாலிபரும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி அறிந்த பசவராஜப்பா மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் தன்னை காதலி ஏமாற்றி விட்டதாக தனது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் கூறி வந்து உள்ளார். 

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை கிராமத்தில் உள்ள இஞ்சி தோட்டத்தில் ஒரு மரத்தில் பசவராஜப்பா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ஹன்சபாவி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், காதலி வேறொரு வாலிபருடன் ஓடியதால் மனம் உடைந்து பசவராஜப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதுகுறித்து ஹன்சபாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.