தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்தவுடன் அமல்படுத்தப்படும் - அமித்ஷா திட்டவட்டம் + "||" + CAA will be implemented once the corona vaccination works are completed - Amit Shah

குடியுரிமை திருத்த சட்டம் கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்தவுடன் அமல்படுத்தப்படும் - அமித்ஷா திட்டவட்டம்

குடியுரிமை திருத்த சட்டம் கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்தவுடன் அமல்படுத்தப்படும் - அமித்ஷா திட்டவட்டம்
தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்களாத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் பணிகளில் பா.ஜனதா தீவிரமாக களமிறங்கி உள்ளது. அந்தவகையில் தாகூர்நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். பாகிஸ்தான் பிரிவினை மற்றும் வங்காளதேசம் உருவாக்கத்தின்போது இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த மதுவா சமூகத்தினர் வாழும் அந்த பகுதியில், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அமித்ஷா பேசினார்.

அவர் கூறுகையில், ‘மோடி அரசு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கியதால் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடிந்தவுடன், இந்த சட்டம் அமல்படுத்தப்படும். இந்த சட்டத்தின்கீழ் மதுவா சமூகத்தினர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டிய அமித்ஷா, இந்த சட்டத்தால் இந்திய சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதியளித்தார்.

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி கூறியிருப்பதாகவும், ஆனால் சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு அவர் முதல்-மந்திரியாக இருக்கமாட்டார் என்பதால், அவரால் எதிர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம்: மாநிலங்களவையில் ஆதரவு; தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு - அதிமுக மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதிமுகவினர் எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
2. குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது - மு.க.ஸ்டாலின் உறுதி
குடியுரிமை திருத்த சட்டம் எக்காரணத்தைக் கொண்டும் அமல்படுத்தப்படாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
3. ஷாகின் பாக் போராட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஷாகின் பாக் போராட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
4. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது- அமித்ஷா
திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமே தகர்ந்து விட்டது. என அமித்ஷா கூறினார்.