போலி கொரோனா மருந்து விற்பனையை தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


போலி கொரோனா மருந்து விற்பனையை தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 12 Feb 2021 9:55 AM GMT (Updated: 12 Feb 2021 9:55 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘போலி கொரோனா மருந்துகளை சில சட்டவிரோத நிறுவனங்கள் தயாரித்து விற்கும், இதற்காக இணையதளங்கள் பயன்படுத்தப்படும் என்ற எச்சரிக்கையை 'இன்டர்போல்' அதன் உறுப்பு நாடுகளுக்கு விடுத்துள்ளது.

இந்தியா போன்ற பெரும்மக்கள் தொகை கொண்ட நாட்டில் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பயத்தில் அப்பாவி மக்கள் இணையதளங்களில் விற்கப்படும் போலி மருந்துகளை வாங்கக்கூடும். எனவே, போலி கொரோனா மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பொதுவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியாது. உறுதியான தரவுகளுடன் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story