தேசிய செய்திகள்

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி + "||" + Andhra Pradesh: At least 4 people feared dead after a tourist bus fell off a hill in Ananthagiri, Visakhapatnam

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி

விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து  8 பேர் பலி
விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
விசாகபட்டினம்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனந்தகிரி கிராமத்திற்கு அருகே ஒரு சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில்  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

ஐதராபாத்தின் தினேஷ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து அனந்தகிரி கிராமத்திற்கு அருகிலுள்ள டுமுகு குக்கிராமத்தின் அருகே சாலையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. 

இந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காயமடைந்த சில பயணிகளின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதாக  கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் விசாகப்பட்டினம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டியதால் விபத்து 3 பேர் பலி
மடியில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காரை ஓட்டியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
2. சிதம்பரம் அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி - 22 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அரசு குளிர்சாதன சொகுசுப் பஸ்ஸும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3. சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
4. தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
5. வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.