தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை + "||" + Special Committee Consultation with Farmers on Agricultural Laws

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவிலலை.

இதற்கிடையே இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மேற்படி 3 சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

மேலும் இந்த சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு குழு ஒன்றையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அனில் கன்வாத், அசோக் குலாதி, பிரமோத் குமார் ஜோஷி ஆகிய மூவரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு உறுப்பினரான பூபிந்தர் சிங் மன் ஏற்கனவே விலகி விட்டார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த மூவர் குழுவினர், விவசாயிகள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்துறையினருடன் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் 7-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் ஆந்திரா, பீகார், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய உற்பத்தியாளர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டின் மூவர் குழுவினரிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
2. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் அடுத்த மாதம் பாதயாத்திரை
கடந்த 4 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
3. 100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங்கிரஸ் போராடும் - பிரியங்கா காந்தி
100 நாட்கள் அல்ல, 100 மாதங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
4. வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
5. தடை செய்யப்பட்டவை காண்பிக்கப்பட்டிருந்தால் தவறானது: விவசாய சங்க தலைவர் திகாய்த்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று நடத்திய நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தின்போது ஒரு டிராக்டரில் கட்டப்பட்டிருந்த கொடி சர்ச்சையை ஏற்படுத்தியது.