தேசிய செய்திகள்

வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து + "||" + Agricultural reform India’s domestic issue...will continue to follow farmers' protest closely: UK govt

வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து

வேளாண் சட்ட விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை; இங்கிலாந்து எம்.பி. கருத்து
‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று இங்கிலாந்து எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன், 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த போராட்டம் தொடர்பாக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் எதிர்வினை ஆற்றி வருகிறது.

இந்த சூழலில் டெல்லியில் நடந்து வரும் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என இங்கிலாந்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற பொதுசபையில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் பொதுச்சபை தலைவரான ஜேக்கப் ரீஸ்-மோக் நேற்று பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை இங்கிலாந்து அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. வேளாண் சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஒரு உள்நாட்டு பிரச்சினை ஆகும். எனினும் இது கவலைப்பட வேண்டிய ஒரு அம்சம்தான்’ என்று கூறினார்.

இந்தியா நமது நட்பு நாடாக இருக்கும் நிலையில், அந்த நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக நினைக்கும்போது, ஒரு நண்பராக நாம் அதை சுட்டிக்காட்டலாம் என கூறிய ஜேக்கப், கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டோமிக் ராப் இந்தியா சென்றிருந்தபோது வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் இது குறித்து எடுத்து கூறியதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ அவருக்கு வயது 99. இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
3. இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரகத்தை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்
ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
4. இங்கிலாந்தில் பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் - கல்லூரிகள்
இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக பகீர் புகார் ஒன்று இங்கிலாந்தை உலுக்கத் தயாராகிறது.
5. 7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் 7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.