இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் -நிர்மலா சீதாராமன்


இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும்  -நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 13 Feb 2021 5:29 AM GMT (Updated: 13 Feb 2021 5:29 AM GMT)

இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் முடிகிறது. வழக்கமாக மாலை தொடங்கும் மக்களவை, இன்று காலை 10 மணிக்கு  கூடியது. இதில் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

 “ இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும். பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு குறையவில்லை. சுகாதார ஆராய்ச்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று போன்ற சவாலன சமயம் கூட  அரசின் சீர்திருத்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை ஓடவில்லை. நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள்  அவசியமானது” என்றார். 


Next Story