ஷாகின் பாக் போராட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் உத்தரவு


ஷாகின் பாக் போராட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 13 Feb 2021 11:10 AM GMT (Updated: 13 Feb 2021 11:10 AM GMT)

ஷாகின் பாக் போராட்டம்: எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.

குறிப்பாக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் 2020 மார்ச் 24-ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடந்தன.

யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று போராட்டக்காரர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

ஷாகின் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்குப் பெரும் இடையூறாக இருப்பதாகக் குற்றம் சாட்டி சுப்ரீம் கோர்ட்டில்  சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமித் ஷாகினி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் 2020ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தீர்ப்பளித்தனர்

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சமூக செயல்பாட்டாளர்கள் 12 பேர் சுப்ரீம்ம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பின் நகல் நேற்று இரவுதான் வெளியானது.

நீதிபதிகள் அளித்த தீர்ர்ப்பில்  முந்தைய நீதித்துறை அறிவிப்புகளை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம், அரசியலமைப்புத் திட்டம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு, ஆனால் சில கடமைகளைக் கொண்டிருக்க வேண்டிய கடமையுடன் உள்ளது என்ற எங்கள் கருத்தை பதிவு செய்துள்ளோம். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. சில தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்கள் இருக்கலாம், ஆனால் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு அல்லது எதிர்ப்பு ஏற்பட்டால், ஒரு பொது இடத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்க முடியாது என்று கூறி உள்ளனர்.

Next Story