2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 13 Feb 2021 1:48 PM GMT (Updated: 13 Feb 2021 1:48 PM GMT)

2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி

மக்களவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மத்திய அரசு மீது, ராகுல் முன்வைத்த புகாரை மேற்கோள்காட்டி கடுமையாக பேசினார். 

பணக்காரர்களுக்கான அரசாக மோடி அரசு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஏழை-எளியோரும், அவர்களுக்கான திட்டங்களுமே, மோடி அரசின் கூட்டாளிகள் என உறுதிபடக் கூறினார்.

மன்மோகன்சிங் சொன்னதையே செய்தோம் என்ற பிரதமரின் பேச்சுக்குப் பிறகு, காங்கிரசார், குறிப்பாக ராகுல் காந்தி வாய் திறக்க மறுப்பதாக, நிர்மலா குற்றம்சாட்டினார். நாட்டின் அழிவுக் கால மனிதராக மாறி வரும் ராகுல் தலைமையில்தான் எதிர்க்கட்சிகளும் அணிவகுப்பதாக, நிர்மலா சாடியுள்ளார்.

2 பேரால் 2 பேருக்காக ஆட்சி நடத்தியது காங்கிரஸ் தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்தியா தற்சார்பு பாதையை நோக்கி செல்ல, மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் என்ற அவர் நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ள புதிய சீர்திருத்தங்கள் தேவை என்றார்.

மத்திய அரசு எங்கும் எதற்காகவும் கடன் வாங்க விரும்பவில்லை என்றும் இந்திய பொருளாதாரத்தின் மீதும் தொழில் வணிகத் திறன் மீதும் பாஜக அரசுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story