தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி + "||" + Modiji Chahte Hain. Rahul Gandhi At Rajasthan Tractor Rally

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டிராக்டர் ஓட்டினார்
ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ரூபங்கர் பகுதியில் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபியர்களின் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டார்.  இதில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வர் அசோக் கெலாட் உடன் இணைந்து டிராக்டர் ஓட்டினார் .

விவசாயிகள் போராட்டத்தில்  ராகுல்காந்தி பேசும் போது கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்களால் பசி, வேலைவாய்ப்பின்மை, தற்கொலை போன்றவை அதிகரிக்கும்.பிரதமர் அவர் விருப்பங்களைத் தருகிறார் என்று கூறுகிறார். ஆம், அவர் கொடுத்துள்ளார் பசி, வேலையின்மை மற்றும் தற்கொலை ஆகியவற்றை.

பிரதமர் விவசாயிகளுடன் பேச்சு நடத்த  விரும்புகிறார், ஆனால் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை அவர்கள் பெச்சு நடத்த மாட்டார்கள். விவசாயம் 'பாரத் மாதா'வுக்கு சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு  அல்ல என கூறினார்.

கூட்டத்தில்  காங்கிரஸ் மூத்த தலைவர் கோவிந்த் சிங் தோட்ஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏரலில் விவசாயிகள் போராட்டம்
ஏரலில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
2. திருவண்ணாமலை; நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
மல்லவாடி ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை- விவசாய அமைப்புகள்
அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். ஆனால் கோரிக்கைகளில் சமரசம் இல்லை என விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறி உள்ளார்.
4. பண்ணைகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் - மத்திய அரசு பஞ்சாப் அரசுக்கு கடிதம்
பண்ணைகளில் கூலி தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய போதைபொருள் கொடுக்கப்படுகிறது என மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு விவசாய சங்க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
5. விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் : சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு
விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை