சென்னை-ஹவுரா ரெயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு: ரெயில்வே காவலரின் உதவியால் பெரும் விபத்து தவிர்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2021 10:31 PM GMT (Updated: 13 Feb 2021 10:31 PM GMT)

சென்னை-ஹவுரா ரெயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட இருந்து பெரும் விபத்து ரெயில்வே காவலரின் உதவியால் தவிர்க்கப்பட்டது.

புவனேஸ்வர், 

ஆந்திராவின் சோம்பேட்டாவில் நேற்று காலை ஒரு பெரிய ரயில் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. முன்னதாக சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் 2-ம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்றில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு இருந்ததை ரெயிலின் காவலர் கண்டுபிடித்தார். இது குறித்து உடனடியாக அவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அந்த ரெயில் சோம்பேட்டா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அந்த பெட்டியில் இருந்த சுமார் 90 பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் மற்ற பெட்டிகளில் ஏற்றப்பட்டு புவனேஸ்வர் வரை பயணம் செய்தனர். அங்கிருந்து மாற்று பெட்டி இணைக்கப்பட்டு, பயணிகளை அந்த பெட்டியில் ஏற்றி பயணத்தை தொடர்ந்தது. இந்த தொழில்நுட்பக்கோளாறை கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால், ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story