தேசிய செய்திகள்

டெல்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் - திக்ரி எல்லையில் போலீசார் குவிப்பு + "||" + Farmers protest continues for 81st day in Delhi - Security deployment at Tikri border

டெல்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் - திக்ரி எல்லையில் போலீசார் குவிப்பு

டெல்லியில் 81-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் - திக்ரி எல்லையில் போலீசார் குவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 81-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 81-வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில் இன்று டெல்லி எல்லைப்பகுதிகளில் 81-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சாலைகளின் முள் வேலிகளுடன் கூடிய தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திக்ரி எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 4,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்: இரண்டு வாரங்களில் 12 ஆயிரம் பேருக்கு அபராதம்
டெல்லியில் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு வாரங்களில் 12 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்தவ துறை நிபுணர்களுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.
5. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 2,790 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.