தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மேலும் ஒரு பின்னடைவு + "||" + Fresh Term Of Bombay High Court Judge Who Delivered Controversial Verdicts Reduced To 1 Year

பாலியல் வழக்கில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மேலும் ஒரு பின்னடைவு

பாலியல் வழக்கில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மேலும் ஒரு பின்னடைவு
பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சமீபத்தில் போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேதிவாலா, உடலோடு உடல் தீண்டாமல் ஆடையுடன் தீண்டுவது பாலியல் சீண்டல் ஆகாது என தீப்பளித்தார். இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  நிலையில் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.  

இதேபோல் மற்றொரு பாலியல் வழக்கில், குற்றவாளியின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது என்று அவர் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்புகள் சர்ச்சையானது.  எனினும் மும்பை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில்,  சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின்  கூடுதல் நீதிபதி பதவிக்காலம்  2 ஆண்டுகளாக இருந்ததை  ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்வியில் உயர்ந்த நிலையை பெண்கள் அடைய வேண்டும்; நீதிபதி பேச்சு
கல்வியில் உயர்ந்த நிலையை பெண்கள் அடைய வேண்டும் என்று நீதிபதி பேசினார்.
2. பாலியல் புகார் கூறப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மீதான விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் நீதிபதி உத்தரவு
பாலியல் புகார் கூறப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி மீதான விசாரணையை ஐகோர்ட்டு நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
3. மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கம், அறநெறிகளை கற்றுக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் பேச்சு
மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கம், அறநெறிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வி.ஐ.டி.யில் காணொலி மூலம் நடைபெற்ற அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை உதவித் தொகை வழங்கும் விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ந.கிருபாகரன் பேசினார்.
4. நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி நேற்று ஆய்வு செய்தார்.