வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு


வேளாண் சட்ட எதிர்ப்பு:  நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு
x
தினத்தந்தி 15 Feb 2021 12:03 AM GMT (Updated: 15 Feb 2021 12:03 AM GMT)

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் 40 விவசாய சங்க தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு னசெய்துள்ளனர்.

கர்னால்,

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் எல்லை பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகள் திரண்டு இருந்து போராடி வருகின்றனர்.  போராட்ட பகுதிகளில் போலீசாரூம் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

அரியானாவின் கர்னால் பகுதியில் இந்திரி என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை மத்திய அரசை அமைதியாக இருக்க வேளாண் அமைப்புகள் விட கூடாது என கூறினார்.

இந்த முறை 40 லட்சம் டிராக்டர்களை கொண்டு பேரணி நடத்தப்படும்.  இதில், நாடு முழுவதும் ஆதரவை பெறுவதற்காக 40 தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.  இந்த இயக்கத்திற்காக ஒவ்வொருவரும் இணைந்து உள்ளனர்.  நாட்டின் எதிர்காலம் பற்றி விவசாயிகள் இனி முடிவு செய்வார்கள் என கூறியுள்ளார்.

Next Story