தேசிய செய்திகள்

காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார் + "||" + Police marry 15 Naxalites on Valentine's Day

காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்

காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்
சத்தீஷ்காரில் காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் தன்டேவாடா, சுக்மா நகரங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும்.  இதனால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு உரிய பரிசு தொகையும் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், நக்சலைட்டுகளின் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களுடைய ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.

அவர்களில் 15 பேருக்கு காதலர் தினத்தில் நேற்று தன்டேவாடா போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர்.  இதுபற்றி எஸ்.பி. அபிசேக் பல்லவ் கூறும்பொழுது, அனைவர் மீதும் தலைக்கு பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இவர்களை பிடித்து தருபவர்கள் அல்லது இவர்களது இருப்பிடம் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு உரிய பரிசு வழங்கப்படும்.

கடந்த 6 மாதங்களில் இவர்கள் ஆயுதங்களை போட்டு விட்டு சரண் அடைந்தனர்.  அவர்களுடைய திருமணம் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
முதல்-அமைச்சரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.
2. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர தயார்: தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.
3. அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.
4. உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் தேவையா? டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி
உருமாறும் கொரோனாவால் 3வது பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டிய தேவை ஏற்பட கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.
5. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 350க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என மத்திய இணை மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.