தேசிய செய்திகள்

கேரளாவில் புதிதாக 2,884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Kerala reports 2884 new cases on Monday; 2651 cases through contact, 13 deaths

கேரளாவில் புதிதாக 2,884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் புதிதாக 2,884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் இன்று புதிதாக 2,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 07 ஆயிரத்து 019 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், இன்று ஒரே நாளில் 5,073 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 41 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 61,281 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,341 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள்: மாநில அரசு ஏற்பாடு
கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மாநில அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.
3. கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை - 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்
கேரளாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல பகுதிகளில் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 8,778 பேர் கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இன்று 7,515- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,515- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை