மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 39 பேர் உயிரிழப்பு


மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 39 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 7:48 AM GMT (Updated: 16 Feb 2021 8:40 AM GMT)

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் சிதி என்ற இடத்தில் இருந்து சாட்னா என்ற இடத்திற்கு 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பாட்னா கிராமம் அருகே வந்த போது அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காலை 7.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 39- பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.  

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மூத்த அமைச்சர்கள் விரைந்துள்ளனர். இந்த விபத்தையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை மாநில அரசு ரத்து செய்துள்ளது.  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட சிவராஜ் சிங் சவுகான், 

“ நடந்த சம்பவம் மிகவும் துயரமானது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய இரண்டு மந்திரி நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மாநிலமும் உறுதுணையாக இருக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.

Next Story