தென் ஆப்பிரிக்கா- பிரேசில் நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்புடன் இந்தியா வந்த 4 பேர்


தென் ஆப்பிரிக்கா- பிரேசில் நாடுகளில் உருமாறிய  கொரோனா பாதிப்புடன் இந்தியா வந்த 4 பேர்
x
தினத்தந்தி 16 Feb 2021 2:00 PM GMT (Updated: 16 Feb 2021 2:00 PM GMT)

தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்புடன் 4 பேர் இந்தியா வந்துள்ளனர்.

பெங்களூரு: 

இங்கிலாந்து கொரோனா போன்று, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாறிய நிலையில், அதிதீவிர தன்மையுடன் பரவிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

ஜனவரி மாதம்  தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 4 பேர், அந்நாட்டில் அதிதீவிர தன்மையுடன் பரவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிரேசிலில் பரவும், அதிதீவிர தன்மையுடைய கொரோனா வைரசால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு திரும்பிய நிலையில், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அங்கோலாவிலிருந்து ஒருவர், தான்சானியாவிலிருந்து ஒருவர் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இரண்டு பேர்  என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கா அல்லது பிரேசிலில் இருந்து நேரடி விமானங்கள் எதுவும் இல்லை, எனவே இந்த விஷயத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சும் சிவில் விமான அமைச்சும் தொடர்பு கொண்டுள்ளன" என்று சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறினார்.

Next Story