தேசிய செய்திகள்

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை + "||" + Rahul Gandhi arrives in Pondicherry today

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை

ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார். சென்னையில் இருந்து புதுவை விமான நிலையத்துக்கு பகல் 12 மணியளவில் தனி விமானம் மூலம் வருகிறார். அங்கு அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக மீனவ கிராமமான சோலைநகருக்கு ராகுல்காந்தி காரில் செல்கிறார். அங்கு மீனவ பெண்களை சந்தித்துப் பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடக்கிறது. அதன்பின் அக்கார்டு ஓட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிடுகிறார். சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் அங்கிருந்து ரோடியர் மில் திடலுக்கு வருகிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதன்பின் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார். ராகுல்காந்தியின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக புதுவை நகரப் பகுதியில் ஆங்காங்கே வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலும் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராகுல்காந்தியுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க புதுவை காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
3. கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்: 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அங்குள்ள 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
5. கேரளாவில் இன்று சட்டசபை தேர்தல்: மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு
கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதேநேரம் மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை