கேரள சட்டசபை தேர்தலை ஏப்ரல் 1-6 நாட்களில் நடத்த வேண்டாம் என கிறிஸ்தவ அமைப்புகள் கடிதம்


கேரள சட்டசபை தேர்தலை ஏப்ரல் 1-6 நாட்களில் நடத்த வேண்டாம் என கிறிஸ்தவ அமைப்புகள் கடிதம்
x
தினத்தந்தி 17 Feb 2021 12:11 AM GMT (Updated: 17 Feb 2021 12:11 AM GMT)

கேரளாவில் வரும் ஏப்ரல் 1 முதல் 6 வரையிலான நாட்களில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டாம் என தலைமை தேர்தல் ஆணையாளருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.

கொச்சி,

கேரளாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோராவுக்கு கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது

அதில், கேரளாவில் வரும் ஏப்ரல் 1 முதல் 6 வரையிலான நாட்களில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டாம்.  அந்த நாட்களில் கிறிஸ்தவர்களுக்கான புனித நாட்கள் வருகின்றன என தெரிவித்து உள்ளது.

கிறிஸ்தர்களின் மிக முக்கிய புனித நாட்களான மாண்டி வியாழன், புனித வெள்ளி, புனித சனி மற்றும் ஈஸ்டர் ஆகியவை ஏப்ரல் 1 முதல் 4 வரையிலான நாட்களில் வருகின்றன.  இந்த நாட்களில் தேர்தல் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

கிறிஸ்தவர்களான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அந்த நாட்களில் தேர்தல் ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும்.  ஈஸ்டர் ஞாயிற்று கிழமை முடிந்த பின்னர் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய நாட்களிலும் தேர்தலை தவிர்த்தல் வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

Next Story