பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி


பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி
x
தினத்தந்தி 17 Feb 2021 9:07 AM GMT (Updated: 17 Feb 2021 9:07 AM GMT)

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 7  நகராட்சிகளையும்  காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, 109 முனிசிப்பல் கவுன்சில்கள், 7 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடந்தது. அதில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது.

மொத்தம் 9,222 பேர் இந்த தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். இதில் பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கட்சிக் கைப்பற்றி பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.


Next Story