தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல் + "||" + Against agricultural laws across the country Farmers today blocked rail

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்

நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் 443 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 32,017 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்
நாடு முழுவதும் 443 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் 32,017 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
2. “நாடு முழுவதும் கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை” - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
சான்றிதழ்களில் மரணம் குறித்த பதிவுகள் தெளிவாக இருந்தால் தான் நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
3. நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
நாடு முழுவதும் 5.22 சதவீதம் திருநங்கைகளே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
4. நாடு முழுவதும் 11,717 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் மட்டும் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. நாடு முழுவதும் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் - இந்திய ரயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 86 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.