சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதி வழக்கு முடித்து வைப்பு

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான சதி வழக்கு முடித்து வைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2021 10:20 PM GMT (Updated: 18 Feb 2021 10:20 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அவருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பின்னணியில் உள்ள சதி குறித்து சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் குழுவையும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி அமைத்தது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரின் பின்னணியில் சதி தொடர்பான விவகாரம் 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இது தொடர்பான மின்னணு ஆதாரங்களை மீட்டெடுப்பது மிகவும் சிரமம். குறிப்பாக நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு ‘வாட்ஸ்அப்’ தகவல்கள், ஆதாரங்களை திரட்ட முடியாமல் போனது. ரஞ்சன் கோகாய்க்கு எதிராக இருந்த சதியையும் மறுக்க முடியாது என நீதிபதி ஏ.கே.பட்நாயக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானாக முன்வந்து பதிவு செய்த இந்த வழக்கு விசாரணை எவ்வித பலனும் தரப்போவதில்லை. எனவே இதை முடித்து வைக்கிறோம் என்று நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

Next Story