உலக அளவில் அதிக தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டதில் இந்தியா 3-வது இடம்


உலக அளவில் அதிக தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டதில் இந்தியா 3-வது இடம்
x
தினத்தந்தி 18 Feb 2021 10:29 PM GMT (Updated: 18 Feb 2021 10:29 PM GMT)

உலக அளவில் அதிக டோஸ்கள் பயன்படுத்திய நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தை பெற்று இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இவ்வாறு முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் 28 நாட்களில் 2-வது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்

அதன்படி கடந்த 13-ந்தேதி முதல் நாடு முழுவதும் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. உலக அளவில் மாபெரும் இந்த தடுப்பூசி திட்டம் நேற்று 33-வது நாளை எட்டிய நிலையில், நேற்று காலை 8 மணி வரை 94 லட்சத்து 22 ஆயிரத்து 228 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

இதில் 61 லட்சத்து 96 ஆயிரத்து 641 சுகாதார பணியாளர்கள் (முதல் டோஸ்), 3 லட்சத்து 69 ஆயிரத்து 167 சுகாதார பணியாளர்கள் (2-வது டோஸ்) மற்றும் 28 லட்சத்து 56 ஆயிரத்து 420 முன்கள பணியாளர்கள் (முதல் டோஸ்) தடுப்பூசி பெற்றுள்ளனர். 2-வது டோஸ் தடுப்பூசி பெற்றவர்களில் 58.20 சதவீதம் பேர் 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் கர்நாடகாவில் மட்டுமே 14.74 சதவீதம் பேர் போட்டுள்ளனர்.

இதன் மூலம் உலக அளவில் அதிக டோஸ்கள் பயன்படுத்திய நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தை பெற்று இருக்கிறது. இதில் முதல் 2 இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் பெற்று இருக்கின்றன.

Next Story