தொகுதிக்கு வெளியே வசிப்பவர்களுக்கு தபால் ஓட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தொகுதிக்கு வெளியே வசிப்பவர்களுக்கு தபால் ஓட்டு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Feb 2021 10:32 PM GMT (Updated: 18 Feb 2021 10:32 PM GMT)

தொகுதிக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குரிமை அளிக்க கோரி கேரளத்தை சேர்ந்த எஸ்.சத்யன், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி,

அப்போது நீதிபதிகள், இங்கிலாந்தில் இருந்து கொண்டு இந்தியாவில் வாக்களிக்க உரிமை கோருவதா? சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்காத ஒருவனுக்கு சட்டம் ஏன் உதவ வேண்டும்? ஒருவர் வாக்களிக்கும் இடத்தை நாடாளுமன்றம் அல்லது அரசால் நிர்ணயிக்க முடியுமா? என கேட்டனர்.

இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் காளீஸ்வரன் ராஜ், ஒருவர் வாக்களிக்கும் இடத்தை நாடாளுமன்றம் அல்லது அரசால் நிர்ணயிக்க முடியும் என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

Next Story