துர்கா பூஜை திருவிழாவையொட்டி உருவாகும் படைப்பு தொழில்களின் மதிப்பு ₹32 ஆயிரம் கோடி யுனெஸ்கோ அங்கீகாரம் அளிக்க மம்தா பானர்ஜி வேண்டுகோள்


துர்கா பூஜை திருவிழாவையொட்டி உருவாகும் படைப்பு தொழில்களின் மதிப்பு ₹32 ஆயிரம் கோடி யுனெஸ்கோ அங்கீகாரம் அளிக்க மம்தா பானர்ஜி வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Feb 2021 12:49 AM GMT (Updated: 19 Feb 2021 12:49 AM GMT)

மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை திருவிழாவையொட்டி உருவாகும் படைப்பு தொழில்களின் மதிப்பு ₹32 கோடியே 377 ஆயிரம் என்று கூறிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இதற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவார காலம் நிகழும் இந்த திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கைவினை பொருட்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு என படைப்புததொழில்கள் அதிகம் உருவாகும். இந்நிலையில் அத்தகைய தொழில்களின் மதிப்பு ₹32 கோடியே 377 ஆயிரம் என தெரியவந்துள்ளது.

துர்கா பூஜையையொட்டி உருவாகும் படைப்பு தொழில்களின் பொருளாதார மதிப்பை ஆய்வு செய்வதற்கென்று மேற்கு வங்காள மாநில அரசு குழுவை அமைத்தது. பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.ஐ.டி. காரக்பூர், இங்கிலாந்தில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “துர்கா பூஜையையொட்டி உருவாகும் படைப்பு தொழில்களின் பொருளாதார மதிப்பு ₹32 கோடியே 377 ஆயிரம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 7 நாட்கள் நிகழும் பண்டிகையில் இது மிகப்பெரிய தொகை. இது மாைலத்தீவு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஒப்பானது” என்றார்.

மேலும், ‘துர்கா பூஜை திருவிழாவை உலகின் தலைசிறந்த திருவிழாக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story