இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 19 Feb 2021 10:09 AM GMT (Updated: 19 Feb 2021 10:09 AM GMT)

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. முதல் கட்டமாக, முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடத்தொடங்கி சுமார் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், 

இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.   நாடு முழுவதும் மொத்தம் 1,01,88,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ஆம் இடத்தில் உள்ளது. இந்தப்பட்டியலில்  முதல் இடங்களில் முறையே  அமெரிக்காவும் ( சுமார் 5 கோடி பேர்) இங்கிலாந்தும் (1.6 கோடி பேர்)  உள்ளன.

Next Story