நேதாஜி புகழை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை தோல்வி அடைந்தன - அமித் ஷா


நேதாஜி புகழை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை தோல்வி அடைந்தன - அமித் ஷா
x
தினத்தந்தி 19 Feb 2021 2:23 PM GMT (Updated: 19 Feb 2021 2:23 PM GMT)

நேதாஜி மறக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை தோல்வி அடைந்தன என கொல்கத்தாவில் அமித் ஷா பேசினார்.

கொல்கத்தா

வங்காள புரட்சியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடத்தப்பட்ட கண்காட்சியை கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் தொடங்கி வைத்து பேசிய  உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது 

சுதந்திரப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களிலிருந்து உத்வேகம் பெற நாட்டின் இளைஞர்களை வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறும் போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்  புகழ் மறக்கடிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனால் அவை தோல்வியடைந்துள்ளன. அவரது தைரியம், தேசபக்தி, தியாகம் மற்றும் தேசத்திற்கான தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் மரபு தொடர்ந்து வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

நேதாஜி பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே மக்களால் இன்னும் நேசிக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார். அவரது ஆன்மா இன்னும் மக்களை உற்சாகப்படுத்துகிறது. வரலாற்றை அறிந்த ஒரு இளம் தலைமுறையினரால் மட்டுமே ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முடியும். 

போஸ் ஒரு சிறந்த மாணவர்,  தனது வேலையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.  பிரிட்டிஷ் ஆட்சியின்  கீழ் ஒரு வசதியான வாழ்க்கையை விட, தேசம் தனக்கு முக்கியமானது என எண்ணினார் என கூறினார்.


Next Story