மராட்டியத்தில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 3:02 PM GMT (Updated: 19 Feb 2021 3:02 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சுமார் 75 நாட்கள், அதாவது 2½ மாதத்திற்கு பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நேற்று தாண்டியது. 

இந்த நிலையில், இன்று  கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, மாநிலத்தில் இன்று 6 ஆயிரத்து 112- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்,  கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 2,159- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 44- பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில்  இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 87- ஆயிரத்து 632- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 89 ஆயிரமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 765- ஆகும்.  கொரோனா பாதிப்பால் 51 ஆயிரத்து 713- பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story