"வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது" மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புதிய முழக்கம்


வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புதிய முழக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2021 11:11 AM GMT (Updated: 20 Feb 2021 11:11 AM GMT)

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது என தனது புதிய முழக்கத்தை சனிக்கிழமை வெளியிட்டு உள்ளது.

கொல்கத்தா

மேற்கு வங்களாத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில். திரிணாமுல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற   பா.ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது . திரிணாமுல் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள முக்கிய தலைவர்களை வலைவீசி  பிடித்து வருகிறது.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது  என தனது புதிய முழக்கத்தை சனிக்கிழமை வெளியிட்டு உள்ளது.

 வங்காளம்  தனது சொந்த மகளை விரும்புகிறது (பங்களா நிஜர் மெய்கேய் சாயே) என்ற புதிய முழக்கம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வங்காளத்தின் மகளாக சித்தரிக்கிறது. கோஷம் வெளியான உடனேயே, அமைச்சர்கள் புதிய போஸ்டரை அதில் உள்ள மம்தா பானர்ஜியின் புகைப்படத்துடன், தங்கள் சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்து கொண்டனர்.

திரிணாமுல் தலைவர் அபிஷேக் பானர்ஜி தனது டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கு முதல் மேற்கு வரை - ஒரே ஒரு பெயர் வங்காளம் முழுவதும் எதிரொலிக்கிறது:அது மம்தா பானர்ஜி . தனது மக்களுக்காக போராடுபவர், அனைவரையும் உயர்த்துவார் மற்றும் குரலற்றவர்களுக்காக நிற்கிறார், வங்காளத்தை முன்னோக்கி அழைத்துச் செல்பவர்  அவர் ஒருவர் மட்டுமே ... பங்களா நிஜர் மெய்கேய் சாயே' (வங்கம் தனது சொந்த மகளை விரும்புகிறது)  என் அதில் கூறி உள்ளார்.



Next Story