கேரளா, மராட்டியம் உள்பட ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


கேரளா, மராட்டியம் உள்பட ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 11:15 AM GMT (Updated: 20 Feb 2021 11:15 AM GMT)

கேரளா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் படிப்படியாக குறையத்தொடங்கிய கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக உயரத்தொடங்கியுள்ளது.  

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியுள்ள நிலையில், தொற்று பாதிப்பு உயரத்தொடங்கியிருப்பது  சற்று கவலை அளிப்பதாய் உள்ளது.  

குறிப்பாக கேரளா, மராட்டியம், பஞ்சாப், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயரத்தொடங்கியுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  கொரோனா தொற்று பரவலின் சங்கிலியை உடைக்க தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் நேற்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புறநகர் ரெயில் சேவை அனுமதி போன்ற காரணங்களால் மராட்டியத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 


Next Story