மீண்டும் ஊரடங்கா? கர்நாடக மாநில மந்திரி விளக்கம்


மீண்டும் ஊரடங்கா? கர்நாடக மாநில மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:46 PM GMT (Updated: 20 Feb 2021 12:46 PM GMT)

கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான மராட்டியம், கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையிலும்  மராட்டியம்,  கேரளம், பஞ்சாப், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

 இந்த சூழலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில எல்லைகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் மாநில அரசிடம் இல்லை. எனினும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியம் காட்டாமல் பின்பற்ற வேண்டும்.

கேரளாவில் தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன. மராட்டியத்தில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை பதிவாகிறது. இந்த இரண்டு மாநிலங்களுடன் நாங்கள் எல்லையை பகிர்ந்து கொள்கிறோம். ஆகவே, மராட்டியம், கேரளா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.  

 கர்நாடகாவில்  தென் ஆப்பிரிக்கா, பிரேசிலில் காணப்படும் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இங்கிலாந்தில் பரவிய உருமாறிய கொரோனா மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. எனினும், சமூகத்தில் புதிய வகை கொரோனாவை பரவ நாங்கள் அனுமதிக்கவில்லை” என்றார். 


Next Story