மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா


மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கொரோனா  தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா
x
தினத்தந்தி 20 Feb 2021 12:59 PM GMT (Updated: 20 Feb 2021 12:59 PM GMT)

மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு  கொரோனா தடுப்பூசியை, இந்தியா அண்டை நாடுகளுக்கும் வழங்கி வருகிறது.  பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

இந்த நிலையில்,  மாலத்தீவுகளுக்கு கூடுதலாக  1 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.  மாலத்தீவு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கொரோனா தடுப்பூசிகளை மாலத்தீவுகள் நிதி அமைச்சர் அப்துல் ஷாஹ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வழங்கினார். மாலத்தீவுகளுக்கு ஏற்கனவே இந்தியா 1 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story