டெல்லியில் மேலும் 152- பேருக்கு கொரோனா பாதிப்பு


டெல்லியில் மேலும் 152- பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 3:53 PM GMT (Updated: 20 Feb 2021 3:53 PM GMT)

டெல்லியில் மேலும் 152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 152- பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பில் இருந்து 179- பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 37 ஆயிரத்து 755- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 832- ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 898- ஆகும். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,025- ஆக உள்ளது. 

Next Story