மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்து: மீட்பு பணிகள் நிறைவு


மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்து: மீட்பு பணிகள் நிறைவு
x
தினத்தந்தி 20 Feb 2021 5:24 PM GMT (Updated: 20 Feb 2021 5:24 PM GMT)

மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 16 ஆம் தேதி 61 பேருடன் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. சிதி மாவட்டம் பாட்னா கிராமம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்ற பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் கிராம மக்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் கால்வாயில் நீந்தியபடி கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டனர்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 நாட்கள் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த கடைசி நபரின் உடலும் இன்று மீட்கப்பட்டது. இதையடுத்து மீட்பு பணிகள் கைவிடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.  பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 54 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பேருந்தில் டிரைவர் உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 


Next Story