தேசிய செய்திகள்

மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு + "||" + Police increase security at actor Amitabh Bachchan's home in Mumbai

மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பையில் நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை குறித்து திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் சமீப காலமாக அதிக அளவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நாட்டின் இறையாண்மை குறித்து சச்சின் டெண்டுல்கர், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்தது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்காவிட்டால் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களை மராட்டியத்தில் திரையிட விட மாட்டோம் என அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நானா படோலே எச்சரித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று மும்பை ஜூகுவில் உள்ள அமிதாப் பச்சனின் ஜல்சா பங்களா வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முன்எச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை தான் இது " என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; 6 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து
பொதுமக்கள் கூடுவதை தடுக்க மும்பையில் 6 ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
மும்பையில் பல இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.
3. மும்பையில் கொரோனா சிகிச்சை மையங்களில் அதிக படுக்கை வசதிகள் - மாநகராட்சி நடவடிக்கை
கொரோனாவை சமாளிக்க மும்பையில் உள்ள சிகிச்சை மையங்களில் அதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
4. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மும்பையில் புதிதாக 8,832 பேருக்கு கொரோனா; தாராவியில் 73 பேருக்கு தொற்று உறுதி
மும்பையில் இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக நேற்று 8,832 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாராவியில் 73 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.