மராட்டியத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி மறுப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தது.

அப்போது சட்டசபையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை ஊழியர்கள் மற்றும் கூட்டத்தொடரில் கலந்து கொள்பவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது. இதன்படி சட்டசபை கூட்டத்துக்கு முன் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய சுகாதாரத்துறையிடம் மாநில அரசு ஒப்புதல் கேட்டிருந்தது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசியல்வாதிகள் தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமை பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், இதனால் அவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி தரமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

Next Story