தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது + "||" + 2 Lashkar Terrorists Arrested In J&K's Bandipora, Grenade Attack Averted

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

காஷ்மீரில், தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் பாபச்சன்-பந்திப்போரா பாலத்தில் சோதனை மையம் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த, லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேரை பிடித்து கைது செய்தனர். அபித் வாஸா, பஷீர் அகமது கோஜர் என்ற அவர்கள் இருவரும், வடக்கு காஷ்மீரின் பந்திப்போராவை சேர்ந்தவர்கள்.

அந்த பகுதியில் செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளுக்கு உறைவிடம் அளிப்பது, பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற உதவிகளை அவர்கள் செய்துவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பந்திப்போராவில் பாதுகாப்பு படையினர் மீது கையெறிகுண்டு தாக்குதல் நடத்தவும் அவர்களுக்கு பயங்கரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து, இரண்டு கையெறிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். .

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. ’நாங்கள் பாலஸ்தீனம்’: காஷ்மீரில் சர்ச்சைக்குரிய வகையில் பதாகை - 20 பேர் கைது
காஷ்மீரில் ‘நாங்கள் பாலஸ்தீனம்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பதாகை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
4. காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
5. காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.