மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது


மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 21 Feb 2021 3:58 PM GMT (Updated: 21 Feb 2021 3:58 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.  மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் மராட்டிய முதல்வர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். 

இந்த நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் ஒரே நாளில் 6,971- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 21 லட்சத்து 884- ஆக உயர்ந்துள்ளது.

 கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை19 லட்சத்து 94 ஆயிரத்து 947- ஆக உள்ளது.   கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 35- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 788- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 956- ஆக உள்ளது.


Next Story