மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி தலா ரூ.1 குறைப்பு


மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி தலா ரூ.1 குறைப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 7:06 PM GMT (Updated: 21 Feb 2021 7:06 PM GMT)

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசலுக்கான வரி தலா 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி தலா 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. அதனால், அவற்றின் விலையும் தலா 1 ரூபாய் குறைந்தது.

இதுகுறித்து மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ரா கூறியதாவது:-

இந்த விலை குறைப்பால் மக்களின் சுமை சிறிது குறையும். ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.32.90 வருவாய் கிடைக்கிறது. ஆனால் மாநில அரசுக்கு ரூ.18.46 மட்டுமே கிடைக்கிறது. ஒரு லிட்டர் டீசல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.31.80-ம், மாநில அரசுக்கு ரூ.12.77-ம் கிடைக்கிறது.

மாநில அரசுகளுடன் வருவாய் பகிர்வை தவிர்க்கவே மத்திய அரசு கூடுதல் வரியை விதித்துள்ளது. இது, கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story