தேசிய செய்திகள்

உத்தரபிரதேச முதல்வருக்கு மங்களூரு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு + "||" + BJP party members welcomes Uttar Pradesh CM at Mangalore airport

உத்தரபிரதேச முதல்வருக்கு மங்களூரு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேச முதல்வருக்கு மங்களூரு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த போது அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மங்களூரு,

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நேற்று மங்களூருவுக்கு வந்தார். மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்த அவருக்கு பா.ஜனதா கட்சி தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், அங்கிருந்து கார் மூலம் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் தளிபடப்பு பகுதிக்கு சென்றார்.

அங்கு கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த வெற்றி யாத்திரையில் கலந்து கொண்டார். பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் இரவு மங்களூரு திரும்பினார். அதைதொடர்ந்து மங்களூருவில் கத்ரியில் உள்ள ஜோகி மடத்திற்கு வந்தார். அங்கு ஜோகி மடத்தின் மடாதிபதியை சந்தித்து பேசினார்.

பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி வருகையையொட்டி மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் எல்லை வரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.