தேசிய செய்திகள்

மீனவ மக்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்திப்பு + "||" + Congress General Secretary Priyanka Gandhi meets fishermen

மீனவ மக்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்திப்பு

மீனவ மக்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்திப்பு
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார்.
பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வருகை தந்தார். இதனை தொடர்ந்து அங்குள்ள பஸ்வார் கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். 

இந்த பகுதி மீனவர்கள் போலீஸ் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களின் படகுகள் உடைக்கப்பட்டதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பாதகவும் பிரியங்கா காந்தியிடம் தெரிவித்தனர். மேலும் மீனவர்களின் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி பரிவோடு கேட்டறிந்தார்.